“அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை” - கிருத்திகா உதயநிதி 

“அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை” - கிருத்திகா உதயநிதி 

“அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை” - கிருத்திகா உதயநிதி 
Published on

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியான திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குதிரைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார். குதிரைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. குதிரைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துப் பொருட்களை கிருத்திகா உதயநிதி வழங்கினார்.

அப்போது அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கிருத்திகா அரசியலுக்கு வருவதற்கான எந்த திட்டமும் இல்லை எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com