''அஜித் இல்லாமல் இது சாத்தியமில்லை'' - நெகிழ்ந்த போனி கபூர்!

''அஜித் இல்லாமல் இது சாத்தியமில்லை'' - நெகிழ்ந்த போனி கபூர்!
''அஜித் இல்லாமல் இது சாத்தியமில்லை'' - நெகிழ்ந்த போனி கபூர்!

தன் மனைவி ஸ்ரீதேவியின் கனவை நினைவாக்கியுள்ளதாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்

இந்தி படமான, ‘பிங்க்’,  ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். 

போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ளது. பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளன. இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் சிறப்புக்காட்சி இன்று சிங்கப்பூரில் திரையிடப்பட உள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ''என் மனைவி ஸ்ரீதேவியின் கனவை நிஜமாக்கியுள்ளேன். இது அஜித், வினோத் மற்றும் படக்குழுவினரின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை. இதை நான் எப்போதும் போற்றுவேன்'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com