\
சின்னத்திரை தம்பதியால் திருமணத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன்- ராக்கி சாவந்த்

சின்னத்திரை தம்பதியால் திருமணத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன்- ராக்கி சாவந்த்

சின்னத்திரை தம்பதியால் திருமணத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன்- ராக்கி சாவந்த்
Published on

”சின்னத்திரை நடிகர் கரண் மெஹ்ரா தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதால் திருமணத்தின் மீதான நம்பிக்கையையே இழந்துவிட்டேன்” என்று நடிகை ராக்கி சாவந்த் விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தி சீரியல் நடிகரான கரண் மெஹ்ரா தன்னுடன் நடித்த சீரியல் நடிகை ரிஷா ராவலை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட கருத்து மோதலால் நடிகர் கரண்  தனது மனைவியை தாக்கியுள்ளார்.

தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை நிஷா ராவல் “ என்னை சுவற்றில் தள்ளி தலையில் அடித்தார். அவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. கடந்த மாதமே இருவரும் விவாகரத்து குறித்து ஆலோசித்தோம். வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் தொடர்ச்சியாக என்னை அடித்து துன்புறுத்துகிறார்” என்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். இதனால், நடிகர் கரண் மெஹ்ரா கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் இந்தி சீரியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்காதல் தம்பதிகளின் நெருங்கிய தோழியான நடிகை ராக்கி சாவந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

”இருவருமே எனது நண்பர்கள். இப்படி, சண்டையிட்டு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருமே ஒருவருக்கொருவர் அதிகம் நேசித்தார்கள். இறக்கும்வரை ஒன்றாக வாழ்வோம் என்று சபதம் செய்தார்கள். ஆனால், இந்தளவுக்கு நேசித்தவர்களுக்குள் இவ்வளவு சண்டைகள் வந்ததைப் பார்த்தபோது காதல் மீதும் திருமணத்தின் மீதுமான நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன்” என்று விரக்தியோடு கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com