நடிகர் அஜித்திற்கு ஆம்லெட் போட்டுக் கொடுத்த அருண் விஜய்
நடிகர் அஜித்திற்கு உணவு சமைத்து கொடுத்து அருண் விஜய் அசத்தியிருக்கிறார்.
பொதுவாகவே வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் விருந்து கொடுத்துவிட்டு தான் விஷயத்தை கேட்பவர் நடிகர் அஜித். சமையலிலும் கெட்டிக்காரரான அஜித் பலருக்கும் தன் கையால் பிரியாணி சமைத்துக் கொடுத்து அசத்தியிருக்கிறார். ஆனால் இம்முறை அஜித்திற்கு ஆம்லெட் போட்டுத் கொடுத்து பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் அருண் விஜய்.
பேட்டி ஒன்றில் பேசிய அருண் விஜய், “ ஆந்திராவில் வைத்து அஜித் சாருக்கு ஆம்லெட் போட்டுக் கொடுத்தேன். அவரும் விரும்பி அதனை உண்டார். இதற்கு முன்பும் ‘ என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு மகாபலிபுரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது படக்குழு அனைவருக்கும் நான் உணவு சமைத்து கொடுத்தேன். அப்போது அஜித்தும் அங்குதான் இருந்தார். என் கையால் சமைத்த உணவை அப்போதும் அவர் விரும்பி சுவைத்தார்” என பாசத்துடன் கூறியிருக்கிறார் அருண் விஜய்.