\
“ஒரே மாஃபியா மீரா மிதுன் தான்” - கொலை மிரட்டல் வருவதாக நடிகை ஷாலு புகார்

“ஒரே மாஃபியா மீரா மிதுன் தான்” - கொலை மிரட்டல் வருவதாக நடிகை ஷாலு புகார்

“ஒரே மாஃபியா மீரா மிதுன் தான்” - கொலை மிரட்டல் வருவதாக நடிகை ஷாலு புகார்
Published on

நடிகை மீரா மிதுன் தூண்டுதலின் பேரில் தனக்கு மிரட்டல் வருவதாக நடிகை ஷாலு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மீரா மிதுன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மீரா மிதுன் துண்டுதலின் பேரில் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அவர்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி உள்ளோம். சமூக வலைதளங்களில் எனது புகைப்படத்தை பதிவு செய்து தவறாக சித்தரிக்கின்றனர்.

மாடலிங்கில் அவர் நடவடிக்கை பிடிக்காததால் சிலர் மீராமிதுனை விலக்கினர். அதற்கு நான்தான் காரணம் என்று பழிவாங்க துடிக்கிறார். எனக்கு தெரிந்த ஒரே மாஃபியா மீராமிதுன் தான். மீராமிதுனிடம் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் பேசினால் அதை வைத்து டிவிட் போட்டு தன்னை பிரபல படுத்திக்கொள்ளதான் முயல்வார். நான் முறையாக புகார் கொடுத்துள்ளேன். காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com