\
ஷூட்டிங்கில் 15 முறை முகம் கழுவிய ’தீரன்’ வில்லன்!

ஷூட்டிங்கில் 15 முறை முகம் கழுவிய ’தீரன்’ வில்லன்!

ஷூட்டிங்கில் 15 முறை முகம் கழுவிய ’தீரன்’ வில்லன்!
Published on

தமிழில், வேலாயுதம், தலைவா, 10 எண்றதுக்குள்ள படங்களில் வில்லனாக நடித்தவர், இந்தி நடிகர் அபிமன்யூ சிங். இவர் இப்போது கார்த்தியின் ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்துள்ளார்.

அவர் கூறும்போது, ’இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவம் என்றதும் எனக்குப் பிடித்திருந்தது. கதையில் அறிவுபூர்வமான விஷயங்கள் இருந்தது. என் கேரக்டரின் வடிவமைப்பும் அதன் வரலாறும் பிடித்திருந்தது. நடிகர் கார்த்தி சிறந்த மனிதர். அவர் எப்போதும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை தெளிவாகவும், கவனத்தோடும் செய்யக்கூடியவர். காட்சிக்கு காட்சி தன் கதாபாத்திரத்தை மெருகேற்றிக்கொண்டே இருப்பார். அது சரியாக வரும் வரை தொடர்ந்து வேலை செய்துக்கொண்டே இருப்பார்.

இயக்குநர் வினோத், காட்சிகள் சிறப்பாக வரும் வரை கடுமையாக உழைப்பார். நாங்கள் வெயில் மற்றும் குளிர் அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பின் போது,  ஒரு நாளைக்கு 15 முறை என் முகத்தை கழுவ வேண்டும். அங்கே அவ்வளவு தூசி இருக்கும். கஷ்டம். படத்தின் வெற்றி அந்தக் கஷ்டத்தை போக்கி இருக்கிறது’ என்றார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com