“நிராகரிப்பில் இருந்து மீள நான் போராடினேன்” - வித்யாபாலன்

“நிராகரிப்பில் இருந்து மீள நான் போராடினேன்” - வித்யாபாலன்

“நிராகரிப்பில் இருந்து மீள நான் போராடினேன்” - வித்யாபாலன்
Published on

பாலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகை வித்யாபாலன். தொடர் வெற்றிப்படங்கள் மூலம் பாலிவுட்டின் உச்சத்தில் இருக்கும் வித்யாபாலன் தன் ஆரம்பக்கால நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். 

தன்னுடைய தொடக்க காலங்களில் தென் இந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டியதாகவும், ஆனால் பல இடங்களில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வித்யா பாலன், ''தொடக்க காலத்தில் தென் இந்திய மொழி சினிமா என்னை நிறைய முறை நிராகரித்தது. நிறைய மலையாள சினிமா என்னை ஒதுக்கின. நான் நடிக்கத்தொடங்கியும் ஒரு தமிழ் படத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டேன். எனக்கு ஞாபகம் இருக்கிறது. நானும் என் பெற்றோரும் அந்தத் தமிழ் படதயாரிப்பாளரின் அலுவலகத்துக்குச் சென்றோம். என் பெற்றோர் மிகவும் கவலையில் இருந்தனர். அந்தத் தயாரிப்பாளர் சில காட்சிகளை காட்டினார்.

அந்தக் காட்சியில் நடித்த நடிகையை சுட்டிக்காட்டி அவர் நடிகைக்கான முகத்தோற்றத்துடன் இருப்பதாகக்கூறி என்னை அவமானப்படுத்தினார். அந்த நிராகரிப்பில் இருந்து மீள நான் போராடினேன். என் மீதே எனக்கு வெறுப்பு வந்தது. என்னையே எனக்குப் பிடிக்கவில்லை. நான் பல நாட்களாக கண்ணாடியே பார்க்கவில்லை. அந்தத் தயாரிப்பாளரை நான் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டேன். ஆனால் அதுவும் நல்லது தான். இன்று நான் என்னையே ஏற்றுக்கொண்டுள்ளேன். என்னையே எனக்குப் பிடிக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகை வித்யாபாலன் கால்பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com