”பரியேறும் பெருமாள் படத்திற்காக வருத்தப்பட்டேன்“ - அனுபமா பரமேஸ்வரன் !
- சீ. பிரேம்
அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பரதா’ என்னும் திரைப்படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், அந்த படம் குறித்தான நேர்காணல் ஒன்றில் மாரிசெல்வராஜ் இயக்கியுள்ள பைசன் திரைப்படம் பற்றி பேசியுள்ளார்.
நேர்காணலில் அனுபமா பரமேஸ்வரன் கூறியதாவது, பரியேறும் பெருமாள் படத்தின் கதை முதலில் என்னிடம் தான் கூறப்பட்டது. அப்போது, நான் பல தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். அதனால், டேட் இல்லாததால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அது குறித்து நான் பெரிதும் வருத்தப்பட்டேன். பின்னர், இரண்டாவதாக மாமன்னன் படத்திலும் நடிப்பதற்காக மாரிசெல்வராஜ் என்னை அழைத்தார்.ஆனால், அப்போதும் என்னால் நடிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. மூன்றாவது முறை பைசன் திரைப்படத்திற்காக என்னை அழைத்தபோது ஆர்வமாக சென்றுவிட்டேன். மேலும் பைசன் படத்திற்காக மாரிசெல்வராஜ் புது அணுகுமுறையை கையாண்டார்.
மாரி செல்வராஜின் அணுகுமுறை மற்ற இயக்குனர்களிடம் இருந்து மாறுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து இந்த பைசன் படம் தனது திரை வாழ்க்கையில் முக்கிய இடத்தில் இருக்கும் எனவும் அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பரியேறும்பெருமாள் திரைப்படத்தில் ஜோ கதாப்பாத்திரத்தில் கயல் ஆனந்தி நடித்திருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.