பிக்-பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றுள்ள ஆரவ், ஓவியாவுக்கு தன் மேல் காதல் இருப்பதாக நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும் நிறைய பேர் போன் செய்து வாழ்த்தினார்கள். அதில் ஒருவர் சுகாசினி மணிரத்னம். இன்னொருவர் சிம்பு. பிக்-பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு நான் ஆரம்பத்தில் அதிமாக சப்போர்ட் பண்ணினேன். பிறகு பண்ணவில்லை. ஆனால் அது தவறு என்று பிறகு புரிந்தது. ஓவியாவிடம் அதற்காக ஸாரி கேட்டேன். அங்கிருந்து வெளியே வந்த பிறகு ஓவியாவிடம் இன்னும் பேசவில்லை. ஓவியா என்னை காதலித்ததாகச் சொல்கிறார்கள். எனக்கு அப்படித் தெரியவில்லை. எனக்கு அப்படி ஏதும் ஃபீல் ஆகவில்லை. அவருக்கு என் மீது காதல் இருப்பதாகவும் நினைக்கவில்லை. நான் என் வேலையில் கவனம் செலுத்தி வருகிறேன். அவர் அவரது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். நல்ல கதை அமைந்தால் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது’ என்றார்.