விஜய் - உமாபதி ராமையா
விஜய் - உமாபதி ராமையாweb

விஜய் அரசியலை விமர்சித்து படமா..? ‘அவர் ஒரு சிங்கம்..’ TN 2026 பட இயக்குநர் பதில்!

இது யாருக்கும் எதிரான படம் இல்லை, நாங்கள் விமர்சிப்பதாக சொல்லப்படும் நபர் ஒரு சிங்கம் என்று TN 2026 பட இயக்குநர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா பேசியுள்ளார்.
Published on
Summary

தேர்தலை பின்னணியாகக் கொண்டு உருவான அரசியல் நகைச்சுவை படம் ‘TN 2026 தங்க நட்சத்திரம்’. இப்படத்தின் டீசர் வெளியானதும், தவெக தலைவர் விஜயை குறிவைத்து படம் விமர்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு இயக்குநர் உமாபதி ராமையா, இது யாருக்கும் எதிரான படம் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசியலை மையப்படுத்தி காமெடி திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் TN 2026 தங்க நட்சத்திரம். திரைப்பிரபலமாக இருக்கும் ஒருவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய் என பல திரைப்பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

டிஎன் 2026
டிஎன் 2026

இந்தப்படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கியிருக்கும் நிலையில், படத்தின் கதையை தம்பி ராமையாவே எழுதியுள்ளார். வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி விமர்சனத்திற்குள்ளானது.

டிரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளின் படி தவெக தலைவர் விஜயின் அரசியல் பயணத்தை விமர்சிப்பது போல படம் உருவாகியிருப்பதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார். இந்தசூழலில் தான் TN 2026 படத்தின் இயக்குநர் உமாபதி ராமையா விஜயை விமர்சிக்கும் வகையில் படத்தை எடுக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

விஜய் - உமாபதி ராமையா
"ஒருபோதும் புகை பிடிக்காதீர்கள்.. என்னால் நிறுத்த முடியவில்லை" - செல்வராகவனின் வேண்டுகோள்

யாருக்கும் எதிரான படம் இல்லை..

டிஎன் 2026 படத்தின் டீசர் பேசுபொருளாக மாறிய நிலையில், இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழு கலந்துகொண்டது. இதில் பேசிய படத்தின் இயக்குநர் உமாபதி ராமையா மற்றும் தம்பி ராமையா இருவரும் படம் குறித்து விளக்கம் அளித்தனர்.

உமாபதி ராமையா
உமாபதி ராமையா

படம் மீதான விமர்சனத்திற்கு பதிலளித்த இயக்குநர் உமாபதி ராமையா, “இது யாருக்கும் எதிரான படம் இல்லை. நாங்கள் அவமதிப்பதாக சொல்லப்படும் நபர் ஒரு சிங்கம். சிங்கத்தை யாராவது அவமதிக்க முடியுமா? இதை வெறும் படமாக மட்டும் பாருங்கள், அரசியலாக்காதீர்கள்!" என்று கேட்டுக்கொண்டார்.

தம்பி ராமையா
தம்பி ராமையா

தம்பி ராமையா பேசுகையில், ’அரசியல் குறித்து நையாண்டி செய்து யார் வேண்டுமானாலும் படம் பண்ணலாம். ஆனால் அரசியல் குடும்பத்தில் பிறந்ததால், அரசியல் புரிதல் இருந்ததால் மட்டுமே இந்த கதை எழுதப்பட்டுள்ளது. யாரையும் மனம்நோக கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளோம். தவெக தலைவர் விஜய் உடன் 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ளேன், படத்தில் நடித்த பலரும் சேர்ந்து நடித்துள்ளார்கள். வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் தம்பி ஆதவ் அர்ஜுனா மட்டுமில்லாமல், திமுக, அதிமுக, நாதக, தவெக என அனைத்து கட்சிகளிலும் எனக்கு தம்பிகள் இருக்கின்றனர். இந்தப்படம் குறித்து பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன், வெளியில் இருந்துவரும் கருத்துகளை நம்பி படம் இப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வரவேண்டாம். என் பிள்ளையின் வாழ்க்கையை முடித்துவிடும் நிலைக்கு நானே தள்ளிவிட மாட்டேன், அந்த பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா அவர்கள் சங்கடப்படும் அளவு ஒரு நூலளவு கூட படத்தில் இருக்காது என்பதை சொல்லிக்கொள்கிறேன். படத்தை பார்த்து நீங்களே ஃபோன்செய்து பேசுவீர்கள்’ என்று பேசினார்.

இப்படத்தின் டீசரில் இடம்பெற்ற "சினிமாகார பயல்கள் தமிழ்நாட்டில் வாழலாம், ஆளலாமா?, நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா?, எம்ஜிஆர் எல்லாம் எப்படி முதல்வர் ஆனார்? எங்கள் தலைவருக்கும் அதே மாஸ் இருக்கிறது!" போன்ற வசனங்கள் பேசுபொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.

விஜய் - உமாபதி ராமையா
’கலைஞரை ஸ்டாலின் கைதி போல வைத்திருந்தார்..’ ஆ.ராசா பேசியதாக வைரலாகும் ஆடியோ! EPS விமர்சனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com