அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை நாம் குறைக்க வேண்டும்: ஸ்ருதிஹாசன்

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை நாம் குறைக்க வேண்டும்: ஸ்ருதிஹாசன்

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை நாம் குறைக்க வேண்டும்: ஸ்ருதிஹாசன்
Published on

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை நாம் குறைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட தீபாவளியை கோவை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய ஒரு நண்பரின் வீட்டில் கழித்தார் ஸ்ருதிஹாசன். அது பற்றி அவர் கூறுகையில், ”இந்த வருடம் தீபாவளி பண்டிகை அன்று நண்பர் வீட்டில் இருந்தேன். அவருக்கு ஒரு சின்ன குழந்தை இருக்கிறது. அந்தப் பகுதியில் வனவிலங்குகளும் அதிகமாக வாழ்கின்றன. முதியவர்களும் அதிகம் இருந்தனர். அவர்களுக்கு இடைஞ்சலாக வெடிச்சத்தம் போடுவதை நான் விரும்பவில்லை. பெருகி வரும் காற்று மாசுபாட்டை வருங்காலங்களில் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்”என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனக்கு தனிப்பட்ட முறையில் மத்தாப்புக்களை பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com