\
“என் இன்ஸ்பிரேஷன் அஜித்; வேம்புலி கதாபாத்திரத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்”: ஜான் கொக்கன்

“என் இன்ஸ்பிரேஷன் அஜித்; வேம்புலி கதாபாத்திரத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்”: ஜான் கொக்கன்

“என் இன்ஸ்பிரேஷன் அஜித்; வேம்புலி கதாபாத்திரத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்”: ஜான் கொக்கன்
Published on

”என்னை எப்பொழுதும் ஊக்குவிப்பதற்கும் தன்னம்பிக்கை கொடுத்ததற்கும் நன்றி அஜித் சார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார், ‘சார்பட்டா பரம்பரை’ ஜான் கொக்கன்.

இன்று வெளியாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் இடியாப்ப பரம்பரையின் பாக்ஸிங் வீரராக உடல்மொழி நடிப்பிலேயே மிரட்டியிருந்தார் ‘வேம்புலி’ கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன். கவனம் ஈர்த்துள்ள அவரது நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், தனக்கு ஊக்கம் கொடுத்தது அஜித்தான் என்று நன்றி கூறியிருக்கிறார் ஜான் கொக்கன். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”என்னை எப்பொழுதும் ஊக்குவிப்பதற்கும் மற்றும் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்ததற்கும் நன்றி அஜித் சார். நான் கடினமாக உழைப்பதற்கும் ஒரு நல்ல மனிதனாக இருப்பதற்கும் நீங்கள் தான் இன்ஸ்பிரேஷன். நான் இந்த வேம்புலி கதாபாத்திரத்தை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். லவ் யூ சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com