\
உயிர் உறையும் குளிரில் அஜீத்... வியக்கிறார் விவேக் ஓபராய்!

உயிர் உறையும் குளிரில் அஜீத்... வியக்கிறார் விவேக் ஓபராய்!

உயிர் உறையும் குளிரில் அஜீத்... வியக்கிறார் விவேக் ஓபராய்!
Published on

உயிரை உறைய வைக்கும் குளிரில் அஜீத் வெற்றுடம்புடன் நடித்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று இந்தி நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார்.

அஜீத், காஜல், அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘விவேகம்’. சிவா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 24-ம் தேதி வெளியாகிறது.  இதில் அஜீத்துடன் நடித்தது பற்றி விவேக் ஓபராய் கூறும்போது, ‘தமிழில் நடிக்க ஏற்கனவே எனக்கு அதிக அழைப்புகள் வந்தது. ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் கூட வாய்ப்பு வந்தது. ரஜினியுடன் நடிக்க ஆர்வமாக இருந்தேன். அதில் இப்போது
அக்‌ஷய்குமார் நடிக்கிறார். சிங்கம் 3 படத்திலும் நடிக்க அழைத்தார்கள். சில காரணங்களால் முடியாமல் போய்விட்டது. விவேகம் படத்தில் சிவாவின் திரைக்கதை பிரமிக்க வைப்பதாக இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்றியபோது சில விஷயங்களில் பிரமித்தேன். அதில் ஒன்று நேரம் தவறாமை. 7 மணிக்கு முதல் ஷாட் என்றால் அந்த நேரத்தில் அத்தனை பேரும் அங்கிருந்தது எனக்கு ஆச்சரியமளித்தது. ஐரோப்பாவில்
கடும் குளிரில் இதன் படப்பிடிப்பு நடந்தது. மைனஸ் 16 டிகிரி செல்சியஸ் குளிரில், நான் நான்கு உடைகளை அணிந்துகொண்டு நடித்தேன். ஆனால், அஜீத் வெற்றுடம்புடன் அதில் நடித்ததைப் பார்த்து வியந்தேன். அதை என்னால் நம்பவே முடியவில்லை’ என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com