ஆந்திர அரசு தனக்கு விருது வழங்கியதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டுக்கான நந்தி விருதினை நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்க ஆந்திர அரசு முன் வந்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியானது. இந்த விருது வழங்கப்பட்டதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், “என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் மதிப்பு மிக்க மகிழ்ச்சியை கூறிக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
கமல்ஹாசன் நிமிடத்திற்கு நிமிடம் ட்விட்டரை பயன்படுத்தி வரும் போது ரஜினிகாந்த் கடந்த அக்டோபர் 22ம் தேதி மெர்சல் பட குழுவினருக்கு வாழ்த்து கூறியிருந்தார். அதன் பின் இன்றுதான் அவர் ட்விட்டரை பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

