தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 உட்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் டாப்ஸி. இப்போது இந்தி படங்களில் நடித்துவருகிறார்.
இவர், அக்ஷய்குமார், பிருத்விராஜ், மனோஜ் பாஜ்பாய் நடிக்கும், ’நாம் ஷாபனா’ என்ற படத்தில் நடித்துள்ளார். சிவம் நாயர் இயக்கியுள்ள இதில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ள டாப்ஸி கூறும்போது, ’நிஜ வாழ்க்கையில் என்னால் யாரையும் மெதுவாகக் கூட அடிக்க முடியாது. பள்ளியில் படிக்கும்போது, நான் விளையாட்டில் அதிகமாக ஈடுபடுவேன். அதனால் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவேன். நான் வன்முறையில் இறங்கும் பெண் அல்ல. இந்தப் படத்தின் டைட்டில் ரோலில் நடித்துள்ளேன். ஆக்ஷன் காட்சிகளுக்காக அதிக பயிற்சி எடுத்தேன்’ என்றார்.