\
என் லைஃப் ஸ்டைல் மாற்ற வேண்டும்: ஆண்ட்ரியா புத்தாண்டு சபதம்

என் லைஃப் ஸ்டைல் மாற்ற வேண்டும்: ஆண்ட்ரியா புத்தாண்டு சபதம்

என் லைஃப் ஸ்டைல் மாற்ற வேண்டும்: ஆண்ட்ரியா புத்தாண்டு சபதம்
Published on: 

இந்த ஆண்டு முதல் தனது லைஃப் ஸ்டைலை மாற்ற விரும்புவதாக நடிகை ஆண்ட்ரியா கூறியிருக்கிறார்.

தற்சமயம் ஆண்ட்ரியா ‘விஸ்வரூபம்2’வில் கமலுடன் நடித்து வருகிறார். அவர் புத்தாண்டையொட்டி ஆங்கில ஊடகத்திற்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அவரிடம் செய்தியாளர் நீங்கள் நியூ இயரை எப்படி கொண்டாடப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு, அவர் “வழக்கமா நான் நியூ இயரை எனது நண்பர்களோடுதான் கொண்டாடுவேன். ஆனால் இந்த முறை நான் புத்தாண்டு அன்று லண்டனில் இருப்பேன். இந்த உலகத்தில் அது என்னுடைய மோஸ்ட் ஃபேவரைட் சிட்டி.” என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த ஆண்டு உங்களின் புத்தாண்டு சபதம் என்ன? என்ற கேள்விக்கு “நான் நியூ இயருக்காக சபதம் எடுப்பதில்லை. ஆனால் வருடத்தின் முடிவில் இந்தாண்டு சபதம் என்ன என்று நினைப்பேன். இந்த வருஷம் முதல் என் லைஃப் ஸ்டைலை மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.”என்று கூறியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com