உங்கள் காலில் வீழ்ந்து மன்றாடி கேட்கிறேன்” பாரதிராஜவுக்கு தயாரிப்பாளர் தாணு கோரிக்கை

உங்கள் காலில் வீழ்ந்து மன்றாடி கேட்கிறேன்” பாரதிராஜவுக்கு தயாரிப்பாளர் தாணு கோரிக்கை
உங்கள் காலில் வீழ்ந்து மன்றாடி கேட்கிறேன்” பாரதிராஜவுக்கு தயாரிப்பாளர் தாணு கோரிக்கை

பாரதிராஜா புதிய தயாரிப்பளார் சங்கம் தொடங்கப் போவதாக வந்த அறிவிப்பிற்கு, தயாரிப்பாளர் தாணு உங்கள் காலில் வீழ்ந்து மன்றாடிக் கேட்கிறேன் நமக்குள் பிரிவு வேண்டாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் தலைமையில் நடைபெற்று வந்த தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் பல இடர்பாடுகளை சந்தித்தது. இதனை தொடர்ந்து தலைவர் பதவிக்கான கால வரையறை முடிவடைந்த நிலையில், அடுத்ததாக நடைபெற்ற தேர்தலில் நாசர் அணியினரும், பாக்கியராஜ் அணியினரும் போட்டியிட்டனர். ஆனால் இதிலும்  பிரச்னை ஏற்பட்டதால், பிரச்னையானது நீதிமன்றம் சென்றது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் பாரதிராஜா புதிய தயாரிப்பாளர் சங்கத்தை துவங்கி இருப்பதாகக் கூறி அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பாரதிராஜாவின் இந்த முயற்சி குறித்து பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதில் தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறும் போது “1300 பேரில் 50 பேர்தான் படம் எடுக்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவருக்கும் 4 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் போடப்பட்டுள்ளது புத்தாண்டு தினத்தன்று அனைவருக்கும் 5000 ரூபாய் வழங்கப்படுகிறது. எனக்கு தெரிந்து பாரதிராஜா இந்த தவறை சத்தியமாக செய்யவில்லை. அவரை சூழ்நிலைக்கைதி ஆக்கிவிட்டனர். 

பாரதிராஜா தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்தால் அவரையே நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்போம். கடவுளுக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பமோ அதே மரியாதையை பாரதிராஜவுக்கு நாங்கள் தர கடமைப்பட்டுள்ளோம்.உங்கள் காலில் வீழ்ந்து மன்றாடிக் கேட்கிறேன் நமக்குள் பிரிவு வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் ராஜன் கூறும் போது “ சங்கத்தை பாரதிராஜா உடைப்பது நியாயமே இல்லை. அவரை கையெடுத்து வணங்குகிறேன். எங்களை வழிநடத்த வாருங்கள். இது அரசாங்கத்திற்கு கெட்ட பெயர். தயவு செய்து பாரதிராஜா இந்த சங்கத்தை உடைக்க வேண்டாம். பாரதிராஜாவை சிலர் கெடுக்கிறார்கள்.அவர்களை நம்பாதீர்கள். 50 ஆண்டுகளாக இருக்கும் தாய் சங்கத்திற்கு பாரதிராஜா வர வேண்டும்” என்று கூறினார்.

 தயாரிப்பாளர் கமீலா நாசர் கூறும் போது “ 20 பேர் இருந்தால் ஒரு சங்கத்தை ஆரம்பிக்கலாம். அவர் ஏன் பிரிந்து செல்கிறார் என்பதுதான் என்னுடைய கேள்வி.. நீங்கள் ஏன் பொதுசேவைக்கு வருகிறீர்கள். ஏன் இதில் ஆர்வம் காட்டுக்கீறீகள்? எங்கள் வீட்டு பெண்களை எல்லாம் பொதுச் சேவைக்கு அனுப்பவதில்லை என பாரதிராஜா கூறியதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com