\
’பீஸ்ட்’ படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்: ’விஜய் 66’ இயக்குநர் வம்சி

’பீஸ்ட்’ படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்: ’விஜய் 66’ இயக்குநர் வம்சி

’பீஸ்ட்’ படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்: ’விஜய் 66’ இயக்குநர் வம்சி
Published on

”’பீஸ்ட்’ படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார், ’விஜய் 66’பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் 'பீஸ்ட்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைகிறார். சண்டைக் காட்சிக்காக படக்குழுவினர் கடந்தவாரம் டெல்லி சென்றனர். அங்கு 5 நாட்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், ”‘பீஸ்ட்’ படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார், இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி.

நெல்சன் படத்தை முடித்துவிட்டு விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் ‘விஜய் 66’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார் வம்சி. அதனை, ரீட்விட் செய்து வாழ்த்துகள் கூறிய நெல்சன் திலீப் குமாருக்கு பதிலளித்த வம்சி “ ‘பீஸ்ட்’ படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று உற்சாகமுடன் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com