“லவ் இல்ல.. நான் சிங்கிள்தான்” - சித்தார்த் மல்கோத்ரா ஓபன் டாக்
காதலை தேடிப்போகும் மனநிலையில் தான் இப்போது இல்லை என சித்தார்த் மல்கோத்ரா கூறியுள்ளார்.
பாலிவுட்டில் பிரபலமான நடிகர் சித்தார்த் மல்கோத்ரா. இவருக்கும் ஆலியா பட்டிற்கும் காதல் இருப்பதாக நெடுநாட்களாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவரும் அது குறித்து வெளிப்படையாக கருத்து ஏதும் தெரிவித்தது கிடையாது. இந்நிலையில் தினசரி நாளிதழ் ஒன்றிக்கு பேட்டியளித்த சித்தார்த் மல்கோத்ரா, “நான் இப்போது சிங்கிள்தான். காதலை பெரிய அளவில் தேடிக்கொண்டு செல்லும் மனநிலையில் இல்லை. மும்பைக்கு நிறைய கனவுகளோடு வந்தேன். என் எண்ணங்களை நிறைவேற்ற நான் இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கு. என் ஆற்றல் முழுவதையும் அதில் செலுத்தவே ஆசைப்படுகிறேன். தனிப்பட்ட வாழ்க்கையை விட நடிப்பிற்கே இப்போதைக்கு அதிக முக்கியத்துவம்” என தெரிவித்துள்ளார்.
தற்போது பரிணீதி சோப்ராவுன் சித்தார்த் மல்கோத்ரா படம் ஒன்றில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ஆண்களை கடத்தும் தொழிலில் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பதாக கூறப்படுகிறது.