\
“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா

“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா

“இசைதான் என்னை தேர்ந்தெடுத்தது” - இளையராஜா
Published on

இசையை தாம் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் இசை தான் தம்மை தேர்ந்தெடுத்ததாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். 

இளையராஜாவின் 75 வது பிறந்த நாள் விழா பல்வேறு கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இளையராஜா, கேக் வெட்டிக் பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் மேடையில் தனது பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகப்படுத்திய அவர், இசைப்பயணத்தின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். விழாவில் மாணவர் ஒருவர் விசில் அடித்தார். அதற்கு விசில் அடிக்காதீர் என அறிவுறுத்திய இசைஞானி, கோயிலுக்கும் மேல் பல்கலைக்கழகத்தை தாம் நினைப்பதாகக் கூறினார்.

இளையராஜாவிடம் மாணவர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். உங்கள் வாழ்க்கையில் காதல் அனுபவம் உண்டா என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கழைக்கழகத்தின் 90வது ஆண்டு விழா நடைபெற உள்ள நிலையில், அதற்காக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் நிதியை கல்லூரியின் இசை இருக்கைக்கு வழங்கி உதவவேண்டும் என கல்லூரி சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கை இளையராஜா ஏற்றுக்கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com