\
நான் சாதாரண நடிகன்: விஜய்சேதுபதி பதில்

நான் சாதாரண நடிகன்: விஜய்சேதுபதி பதில்

நான் சாதாரண நடிகன்: விஜய்சேதுபதி பதில்
Published on

நான் சாதாரண நடிகன் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

விஜய்சேதுபதி நடிக்கும் கருப்பன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அந்தப் பட புரமோஷனுக்கான சந்திப்பில் விஜய்சேதுபதி கலந்து கொண்டார். சமீப காலமாக திரையில் அவரது பெயருக்கு முன்னால் மக்கள் செல்வன் என்று பட்டம் போடுகிறார்கள். அந்தப் பட்டத்தை சீனு ராமசாமி அவருக்கு வழங்கியிருந்தார். இவர்தான் விஜய்சேதுபதியை அறிமுகம் செய்து வைத்த இயக்குநர். 
ஆகவே புது பட்டப் பெயர் சம்பந்தமாக இந்த விழாவில் விஜய்சேதுபதியிடம் கேட்டபோது “நான் சாதாரணமான நடிகன். பெரிய நட்சத்திரம் எல்லாம் கிடையாது. எனக்கு சாதாரணமான நடிகன் என்ற பட்டம்தான் வேண்டும்”என்று கூறினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com