அல்லு அர்ஜுன் விவகாரம்: காவல்துறை வெளியிட்ட சிசிடிவி
அல்லு அர்ஜுன் விவகாரம்: காவல்துறை வெளியிட்ட சிசிடிவிஎக்ஸ் தளம்

அல்லு அர்ஜுன் விவகாரம்: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டை ஆதரிக்கும் வகையில் காவல்துறை வெளியிட்ட சிசிடிவி

அல்லு அர்ஜுன் விவகாரத்தில் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டை ஆதரிக்கும் வகையில் காவல்துறை சிசிடிவி வெளியிட்டுள்ளது.
Published on

அல்லு அர்ஜுன் மீதான ரேவந்த் ரெட்டியின் குற்றச்சாட்டை ஆதரிக்கும் வகையில், ரசிகை உயிரிழந்த தினத்தன்று, சந்தியா திரையரங்கில் இருந்து அல்லு அர்ஜுனை காவலர்கள் பாதுகாப்பாக வெளியே அழைத்து செல்லும் சிசிடிவி காட்சியை ஹைதராபாத் காவல்துறை வெளியிட்டுள்ளது.

சம்பவத்தன்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகும் அல்லு அர்ஜுன் திரையரங்கை விட்டு வெளியேற மறுத்துவிட்டதாகவும், காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டியிருந்தார்.

அல்லு அர்ஜுன் விவகாரம்: காவல்துறை வெளியிட்ட சிசிடிவி
அல்லு அர்ஜுனுக்கு கை, கால் போய்விட்டதா.. சட்டசபையில் வைத்து கடுமையாக சாடிய முதல்வர் ரேவந்த் ரெட்டி!

இதனை ஆதரிக்கும் வகையில் ஹைதராபாத் காவல்துறை வெளியிட்டுள்ள சிசிடிவி வீடியோக்களில், கூட்ட நெரிசலுக்கு இடையே அல்லு அர்ஜுனை காவலர்கள் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு படத்தின் விளம்பரம், மக்களின் பாதுகாப்பைவிட முக்கியமானது அல்ல என்றும், பிரபலங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் டிஜிபி ஜிதேந்தர் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் - ரேவந்த் ரெட்டி
அல்லு அர்ஜுன் - ரேவந்த் ரெட்டி

முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அல்லு அர்ஜுன், திரையரங்கு நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டு, பின்னர் காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதித்ததாக கூறியிருந்தார். மேலும், தான் சட்டத்தை மதிப்பவன் என்றும், அனுமதி இல்லை என்று சொன்னால், அந்த இடத்தில் இருந்து உடனே கிளம்பி விடுவேன் எனவும் தெரிவித்திருந்தார்.

அல்லு அர்ஜுன் விவகாரம்: காவல்துறை வெளியிட்ட சிசிடிவி
”கிட்னி ஏதாவது போச்சா?” சட்டசபையில் வெளுத்துவாங்கிய ரேவந்த் ரெட்டி; ஓடிவந்து அல்லு அர்ஜூன் விளக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com