மன்னிப்பு கேட்ட கணவர் - கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிய சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா
தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கணவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டதால் அந்த புகாரை வாபஸ் பெற்றார்.
முன்னதாக, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை ராதா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் கொண்ட எண்ணூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து கடந்த ஓராண்டாக சாலிகிராமத்தில் வாழ்ந்து வரும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகக் கூறி நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.