ஹூமைரா
ஹூமைராமுகநூல்

அழுகிய நிலையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை... யார் இந்த ஹுமைரா அஸ்கர் ? நடந்தது என்ன?

பாகிஸ்தான் நடிகையும் மாடல் அழகியுமான ஹூமைரா அஸ்கர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய் கிழமை அன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

பாகிஸ்தான் நடிகையும் மாடல் அழகியுமான ஹூமைரா அஸ்கர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய் கிழமை அன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான், லாகூரைச் சேர்ந்த ஹூமையா, 2015 ல் பொதுபோக்கு துறையில் தனது பயணத்தை தொடங்கினார். 32 வயதான இவர், ஜஸ்ட் மேரீட், எஹ்சான் ஃபராமோஷ், குரு மற்றும் சல் தில் மேரே போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், ஜலைபீ (2015) மற்றும் பின்னர் லவ் வாக்சின் (2021) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில், ARY டிஜிட்டலில் ரியாலிட்டி ஷோவான தமாஷா கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மக்களிடையே அதிக கவனத்தைப் பெற்றார். ஒரு வருடம் கழித்து, தேசிய பெண் தலைமைத்துவ விருதுகளில் சிறந்த வளர்ந்து வரும் திறமை மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திர விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில்தான், நேற்றைய தினம் (ஜூலை 9) அவர் குடியிருந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கராச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர் கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்துவருவதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்களாகவே எங்கு சென்றார் என்ன ஆனார் என்று தெரியாத சூழல் நிலவியிருந்துள்ளது.

ஹூமைரா
கொடைக்கானல்| ’மொபைலில் வரும் கதைகளை படித்தாலே வருமானம்..’ 300-க்கும் மேற்பட்டோரிடம் 1 கோடி மோசடி!

இதற்கிடையில், இவரது வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் ஹூமையா வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, போலீஸார் வந்து சோதித்ததில், அவர் இறந்து கிடந்துள்ளார். 2 வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. உடற்கூராய்வுக்கு பின் இறப்புக்கானக் காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com