காலா படக்குழுவுக்கு ஹூமா குரேஷி கொடுத்த விருந்து
காலா படக்குழுவினருக்கு நடிகை ஹூமா குரேஷி விருந்து கொடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ரஜினி நடித்து வரும் திரைப்படமான காலாவின் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அதில் பாலிவுட் மாடல் மற்றும் நடிகை ஹூமா குரோஷியின் பகுதிகள் படமாக்கப்பட்டன. மும்பை நகர் பகுதி ஹைவேயில் உள்ள பிரபலமான கல்லூரியில் கதைக்கான சில காட்சிகளை படமாக்கியுள்ளார் ரஞ்சித். இரவு முழுவதும் இவரது காட்சிகளை எடுத்துள்ளனர்.
கடுமையான படப்பிடிப்புக்குப் பின் குரேஷியின் பகுதிகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தன்னுடைய இறுதி படப்பிடிப்பு முடிவடைந்த உடன் காலா படக்குழுவுக்கு குரேஷி ஒரு பிரியா விடை விருந்து வைத்துள்ளார். அதில் கேமிராமேன் முரளி மற்றும் சக நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். அதில் மிக உருக்கமாக தனது பிரிவை பகிர்ந்து கொண்டிருக்கிறார் குரேஷி.
மேலும் அவர் தனது ட்விட்டரில் இயக்குநர் பா. ரஞ்சித்தை பீம்ஜி என்று குறிப்பிட்டுள்ளார். “காலா எனக்கு மிக அருமையான பயணம்.இந்தப் புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் என்னால் இருக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.