காலில் விழுந்த ரசிகர்: பதிலுக்கு காலில் விழுந்த ஹிருத்திக் ரோஷன்
நடிகர் ஹிருத்திக் ரோஷன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஓருவர் அவரது காலில் விழ, ஹிருத்திக் ரோஷனும் திரும்பி அந்த ரசிகரது காலில் விழுந்தார்.
தமிழில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'. இதில் விக்ரமாக நடிகர் மாதவனும், வேதாவாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். தற்போது அப்படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளனர்.
இதில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சையிப் அலி கானும், விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இப்படத்தையும் புஷ்கர் காயத்ரி தான் இயக்கி உள்ளனர்.
இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்துள்ள படக்குழு சமீபத்தில் அதன் டீசரை வெளியிட்டது. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஓருவர் அவரது காலில் விழ, ஹிருத்திக் ரோஷனும் திரும்பி அந்த ரசிகரது காலில் விழுந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'ஹிருத்திக் ரோஷன் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நல்ல மனிதர்' என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ரஜினியின் அடுத்த படம் 'தலைவர் 170' - இவர் தான் இயக்குநரா?