நடனம் கற்க ரிக்‌ஷா ஓட்டுநர் மகனுக்கு 3 லட்சம் நிதியுதவி அளித்த ஹிரித்திக் ரோஷன்.!

நடனம் கற்க ரிக்‌ஷா ஓட்டுநர் மகனுக்கு 3 லட்சம் நிதியுதவி அளித்த ஹிரித்திக் ரோஷன்.!
நடனம் கற்க ரிக்‌ஷா ஓட்டுநர் மகனுக்கு 3 லட்சம் நிதியுதவி அளித்த ஹிரித்திக் ரோஷன்.!

லண்டனில் பாலே டான்ஸ் கற்கவேண்டும் என்ற ரிக்‌ஷா ஓட்டுநர் மகனின் கனவை 3 லட்சம் நிதியுதவி அளித்து ஹிரித்திக் ரோஷன் நிறைவேற்றியுள்ளது பாராட்டுகளை குவித்து வருகிறது. 

கமல் சிங்

டெல்லி விகாஸ்புரியில் ரிக்‌ஷா ஓட்டிக்கொண்டிருப்பவரின் மகன் 20 வயதாகும் கமல் சிங். இவருக்கு டான்ஸ் மீதுதான் காதல்.  பாலே நடனத்தில் சிறந்து விளங்கும் இவருக்கு உலகின் புகழ்பெற்ற லண்டனின் ஆங்கில தேசிய பாலே நடனப்பள்ளியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்பது கனவு. இந்தியாவிலிருந்து அப்பள்ளியில் படிக்க தேர்வான முதல் நபரும் இவர்தான்.

ஆனால், கமல் சிங் அங்கு சேர்ந்து நடனம் கற்க தடையாக இருந்தது குடும்ப வறுமை. தன்னைப் போன்ற ஏழைகளுக்கு லண்டனில் படிப்பதெல்லாம் சாத்தியமில்லை என்று மனம் சோர்ந்திருந்தவருக்குதான் ஹிரித்திக் ரோஷன் நிதியுதவி அளித்து நம்பிக்கையூட்டியிருக்கிறார்.

கமல் சிங்கின் கனவு குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதைப் பார்த்தவர் உடனடியாக மூன்று லட்சம் அளித்து ஊக்கப்படுத்தியுள்ளார். இந்த எதிர்பாராத மகிழ்ச்சியால், கமல் சிங்கின் பயிற்சியாளர் பெர்னாண்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிரித்திக் ரோஷனுக்கு உணர்ச்சிப்பெருக்குடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com