எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்: கலாய்க்கும் நடிகர் நகுல்
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டு டுவிட்டரில் கலாய்த்திருக்கிறார் நகுல்.
ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் சினிவில் நடிக்க வந்தவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பி. பாய்ஸில் அவர் பயங்கர குண்டாக இருந்தார். அவருடன் நடித்த சித்தார்த், பரத், தரண் என பலரும் காலப் போக்கில் தனக்கென்று தனி அடையாளங்களை சினிமாவில் உருவாக்கினார்கள். சித்தார்த் சாக்லெட் பாய் ஆனார். தரண் இசையமைப்பாளர் ஆனார். பரத் 25 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தார். இதில் நகுலின் அடுத்த கட்டம்தான் ஆச்சர்யமாக அமைந்தது. குண்டுப் பிள்ளையாக இருந்த அவர், உடம்பை ஸ்லிம் ஆக்கி கொண்டு ஹீரோ ஆன போது பலரும் நம்பவே இல்லை. தன் வாழ்நாளில் எப்படி படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறேன் என்று பலர் சொல்வார்கள். ஆனால் படிப்படியா எப்படி குறைந்து வந்திருக்கிறார் நகுல் என காட்டும் அந்தப் புகைப்படங்கள் டுவிட்டரில் டிடெண்ட் ஆகி உள்ளது. சென்னை பசங்க என்கிற டுவிட்டர் பக்கம் அதை டிரெண்ட் செய்து உள்ளது.
தனது சிக்ஸ் பேக் படங்களை ரீ- டுவிட் செய்த நகுல்’வாழ்வில் ஒவ்வொரு படியாக நாம் முன்னேறி போய்க்கொண்டே இருக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.