KANGUVA | SURIYA
KANGUVA | SURIYAKANGUVA

KANGUVA | ஆஸ்கர் தகுதிப்பட்டியலில் ஒரே தமிழ் படம்..!

ஆஸ்கரில் சூர்யாவின் கங்குவா... சிறந்த பட பட்டியலில் ஒரே தமிழ் படமாக இடம்பெற்றுள்ளது. இதன் முழுவிவரம் இதோ...
Published on

97வது ஆஸ்கர் விருது விழா மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இப்போது விருதுக்கு உரிய படங்களை, கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இயங்கிவருகிறது ஆஸ்கர்ஸ். இதில் கங்குவா இடம்பெற்றது எப்படி என தெரிந்து கொள்ள, ஆஸ்கர் விருதுகள் எப்படி இயங்குகிறது என தெரிந்து கொள்ள வேண்டும். ACTING, MUSIC, DIRECTING, BEST PICTURE உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு உலகின் எந்த மொழிப் படத்தையும் சமர்ப்பிக்க முடியும். ஆனால் அதற்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை 42 பக்கங்கள் கொண்ட OSCARS RULESல் உள்ளவற்றை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப சமர்ப்பிக்க வேண்டும். படம் 40 நிமிடங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பது துவங்கி படத்தை அமெரிக்காவில் வெளியிட வேண்டும் என்பது வரை பல்வேறு விதிகள் இருக்கிறது.

இந்த ஆண்டு ஆஸ்கருக்கு, சிறந்த படத்திற்கான விருது பிரிவின் கீழ் 323 படங்கள் உலகம் முழுவதிலிருந்தும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் படங்களில் இருந்து எவை எல்லாம் ஆஸ்கரின் விதிகளை சரியாக பின்பற்றியிருக்கிறது என்று தேர்வு செய்து ஒரு தகுதி பட்டியலை உருவாக்குவார்கள். அந்தப் பட்டியலை நேற்று (ஜனவரி 6) வெளியிட்டது ஆஸ்கர். அந்த தகுதி பட்டியலுக்கு சென்றிருக்கும் 207 படங்களில் ஒரு படம் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `கங்குவா' படம். இன்னும் சொல்லப்போனால் தகுதிப்பட்டியலில் இருக்கும் ஒரே தமிழ் படம் `கங்குவா' தான். மேலும் இதில் `ஆடு ஜீவிதம்', `ALL WE IMAGINE AS LIGHT', `BAND OF MAHARAJAS', `THE ZEBRAS' ஆகிய இந்திய படங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இதனை எந்த விதத்திலும் ஆஸ்கர் வெல்லும் வாய்ப்பு என எடுத்துக் கொள்ள முடியாது. டிசம்பர் 17ம் தேதி 10 விருது பிரிவுகளில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட பட்டியலுக்கு சென்றிருந்த படங்களை நாம் பார்த்தோம். அப்படியான பட்டியல் இல்லை இந்த தகுதிப்பட்டியல். இது வெறுமனே ஒரு தொழிநுட்ப ரீதியாக, தரம் ரீதியாக ஆஸ்கர் வைத்திருக்கும் அளவுகோல்களின் படி எந்த படங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என்ற பட்டியல் மட்டுமே. மேலும் இந்த 97வது ஆஸ்கரில் RAISE என்ற கூடுதல் தரக் கட்டுப்பாட்டு அமைப்பையும் சிறந்த பட விருது பிரிவில் இணைத்துள்ளது ஆஸ்கர்.

கிட்டத்தட்ட 9000 உறுப்பினர்கள் அடங்கிய குழு வாக்களிப்பதன் மூலம், இந்த தகுதிப்பட்டியலில் இருக்கும் படங்களில் இருந்து 15 படங்களை ஷார்ட்லிஸ்ட் செய்வார்கள். அதன் பின் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தி அதிலிருந்து ஐந்து நாமினேஷனை முடிவு செய்வார்கள். பின்பு அதிலிருந்து ஒரு படம் வெற்றி அடையும். ஜனவரி 8ம் தேதி துவங்கும் வாக்கெடுப்பு ஜனவரி 12 வரை நடைபெறுகிறது மேலும் நாமினேஷன் ஜனவரி 17 அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Attachment
PDF
97th Academy Awards Entry Reminder List
Preview

சிறந்த படம் பிரிவில், The Brutalist, Challengers, Civil War, Conclave, Emilia Pérez, It Ends with Us, Juror #2, Memoir of a Snail, The Substance எனப் பல சர்வதேச படங்களும் உள்ளன. இந்தப் பட்டியலில் எந்தெந்த படங்கள் ஷார்ட்லிஸ்ட் சென்று, நாமினேஷன் சென்று, வெற்றிபெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com