'பத்து தல' படத்திற்குள் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி வந்தார்?-இயக்குநர் கிருஷ்ணா பேட்டி

'பத்து தல' படத்திற்குள் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி வந்தார்?-இயக்குநர் கிருஷ்ணா பேட்டி

'பத்து தல' படத்திற்குள் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி வந்தார்?-இயக்குநர் கிருஷ்ணா பேட்டி

‘சில்லுனு ஒரு காதல்’ ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணா தற்போது சிலம்பரசன், கெளதம் கார்த்தி இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ படத்தை இயக்க இருக்கிறார்.

இந்தப் படம் கன்னடத்தில் வெளியான ‘மப்டி’ படத்தை தழுவி எடுக்கப்பட இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், நேற்று அந்தப்படத்தின் போஸ்டர்களை ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வைரலானது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்தும், படத்திற்குள் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி வந்தார் என்பது குறித்தும் அந்தப் படத்தின் இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணா டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “சில்லுனு ஒரு காதல் படத்தில் முதன் முறையாக நானும் ராஜாவும் இணைந்து பணியாற்றலாம் என்று முடிவு செய்ததும், அந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். காரணம் அந்தப் படத்தில் இசைக்கு அவ்வளவு இடம் இருந்தது.

அதேபோல  ‘பத்து தல’ படத்திற்கும் இசை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. காரணம் அமைதி தான் படத்தின் அங்கமாக இருக்கிறது. அதனால் அந்த அமைதியின் அடர்த்தியை வெளிக்கொணர நேர்த்தியான இசை தேவை.

அதனால் இந்தக் கதையை நான் ரஹ்மானிடம் கூறினேன். அவர் பலப் படங்களில் பிஸியாக இருப்பதால் முதலில் அவரிடம் கேட்க தயங்கினேன். ஆனால் அவர் பெரிய மனதுடன் 'ஓகே கிருஷ்ணா நாம பண்ணலாம்' என்றார். ‘மப்டி’ படத்தை தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்து, வீடியோ கால் வழியாகத்தான் அவருக்கு சொன்னேன்.  அவருக்கு கதை பிடித்து விட, மகிழ்ச்சியாக படத்திற்குள் வந்தார்.

இவை அனைத்தும் ஒரு சில மாதங்களிலேயே முடிந்து விட்டது. அதனைத்தொடர்ந்து இராண்டாவது முறையாக அவரை சந்தித்து நேரடியாக கதை சொன்னேன். விரைவில் அந்தப் படத்தின் இசைப்பணிகளில் ஈடுபட உள்ளோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com