\
பாகுபலி 2 ட்ரெய்லர் கசிந்தது எப்படி?: ராஜமவுலி தகவல்

பாகுபலி 2 ட்ரெய்லர் கசிந்தது எப்படி?: ராஜமவுலி தகவல்

பாகுபலி 2 ட்ரெய்லர் கசிந்தது எப்படி?: ராஜமவுலி தகவல்
Published on

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் ட்ரெய்லர் தியேட்டர்களில் காலை 9 மணிக்கும், இணையதளத்தில் மாலை 5 மணிக்கும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.

படத்தினை இந்தியில் வெளியிடும் இயக்குனர் கரண் ஜோஹர் ட்ரெய்லரை காலையில் வெளியிட்டார். ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரெய்லர்களை அவர் வெளியிடவில்லை. ஆனால், காலை 9 மணிக்கு முன்பாகவே பாகுபலி 2 படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் கசிந்தது. இதையடுத்து, வேறுவழியின்றி தமிழ், தெலுங்கு ட்ரெய்லர்களை இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டார். பாகுபலி படத்தின் வெற்றியால் பாகுபலி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தநிலையில், அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பாகவே ட்ரெய்லர் கசிந்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜமவுலி, பேஸ்புக் பக்கத்தில் உள்ள ஒரு குறைபாடே இணையத்தில் ட்ரெய்லர் கசியக் காரணமாக இருக்கும் என்று கருதுவதாகத் தெரிவித்தார். பிரபாஸ்., ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com