எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
Published on

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவர் விரைந்து குணமடைய வேண்டும் என இன்று மாலை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com