\
 ‘பேய் பசி’ இது படத்தலைப்பு

‘பேய் பசி’ இது படத்தலைப்பு

‘பேய் பசி’ இது படத்தலைப்பு
Published on

முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள ‘பேய் பசி’ என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கியுள்ளார். படம் குறித்து இயக்குநர் கூறுகையில்; டிபார்ட்மென்டல் ஸ்டோரை மையமாக வைத்து உருவாக்கிய கதை. ஒரே இடத்தில் நடந்தாலும், சுவாரஸ்யம் எவ்விதத்திலும் குறையாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

படத்தின் கதைக்கு பொருத்தமான தலைப்பை பற்றி ஆலோசனை செய்த பொழுது, 'பேய் பசி' அமைந்தது. சுவாரஸ்யமான படத்தை உருவாக்கியுள்ளோம் என உறுதியாக நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை இக்கதையையும், காட்சிகளையும் மெருகேற்றி, திகிலில் உச்சத்திற்கு கொண்டு போயுள்ளது. ஒரு ப்ரோமோ பாடலையும் யுவன் பாடியுள்ளார். புதுமுகம் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் நாயகனாக நடித்துள்ளார். நடிகர் கருணாகரன், டேனியல், பகவதி பெருமாள் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com