லோகியின் இந்திய வேரியன்ட் ஷாருக் தான்: டாம் ஹிட்டல்ஸ்டன்

லோகி சீசன் 2வின் அனைத்து அத்தியாயங்களும் இப்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன.
டாம் ஹிடில்ஸ்டன்,
டாம் ஹிடில்ஸ்டன்,ஹாட்ஸ்டார்

மார்வெல் ஸ்டுடியோவின் லோகியின் புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடித்த டாம் ஹிடில்ஸ்டன், சமீபத்தில் வெளியான தொடரின் இரண்டாவது சீசனுக்கு இந்திய பார்வையாளர்களின் பாராட்டுக்களால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் மார்வெல் ஸ்டுடியோஸின் லோகியின் இரண்டாவது பாகம் அதன் முதல் பாகத்தை விட அதிக உயரங்களை எட்டியுள்ளது. இறுதி அத்தியாயம் நவம்பர் 10 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் இந்த தொடரின் பாப்புலாரிட்டி குறித்து பேசிய டாம் ஹிடில்ஸ்டன், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு ஒரு வீடியோ செய்தியை அனுப்பினார். அதில், "இந்தியாவில் பார்க்கும் அனைவருக்கும் வணக்கம். இந்தியா முழுவதும் 'லோகி சீசன் 2' க்கான வரவேற்பைப் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் உற்சாகத்திற்கும் நன்றி. நான் ரசித்ததைப் போலவே நீங்களும் பார்த்து ரசித்தீர்கள் என்று நம்புகிறேன்" என்றார்.  

லோகியாக நடித்த டாம் ஹிடில்ஸ்டனுக்கு இந்தியாவுடன் நீண்டகால தொடர்பு உள்ளது. தொடரின் முதல் சீசனின் போது, ஷாருக்கானை இந்தியா மற்றும் பாலிவுட்டுடன் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார் என்பது குறித்து அவர் பேசினார், மேலும் கிங் கானே லோகி நட்சத்திரத்திற்கு பதிலடி கொடுத்தார். இந்த முறையும், லோகியின் பாலிவுட் வேரியன்ட் குறித்து கேட்கப்பட்டபோது, சமீபத்திய பேட்டியில் ஹிடில்ஸ்டன் இந்திய சூப்பர் ஸ்டாரைக் குறிப்பிட்டார். "அவர் (ஷாருக் கான்) சிறந்தவராக இருப்பார், அவர் ஒரு நல்ல வேரியன்ட் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.

லோகி சீசன் 2வின் அனைத்து அத்தியாயங்களும் இப்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com