Game of Thrones-ன் இன்னொரு Prequel சீரிஸ் A Knight of the Seven Kingdoms! | GOT
உலகமெங்கும் புகழ் பெற்ற சீரிஸ் Game of Thrones. எட்டு சீசன்களாக வெளியான இந்த சீரிஸுக்கு என பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. எனவே தொடர்ச்சியாக இந்த கதையை பயன்படுத்தலாம் என `House of the Dragon' சீரிஸ் உருவாக்கப்பட்டது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதைக்கு ப்ரீகுவலாக உருவாக்கப்பட்ட இந்த சீரிஸ் இரண்டு சீசன்கள் இதுவரை வெளியாகியுள்ளது.
இப்போது `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' உலகில் இருந்து இன்னொரு ஸ்பின் ஆஃப் தொடரும் உருவாகிறது. அதுவே `A Knight of the Seven Kingdoms' என்ற வெப் சீரிஸ். இதுவும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையின் ப்ரீகுவலாக உருவாகிறது. `ஹவுஸ் ஆஃப் தி டிராகன்ஸ்' டார்கேரியன் வம்சாவளி மற்றும் ஹைடவர் வம்சாவளி பற்றிய கதையாக நகரும். அதாவது `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கதை நடப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை. அதுவே `எ நைட் ஆஃப் தி செவன் கிங்டம்ஸ்' `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கதை நடப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. George R. R. Martin எழுதிய Tales of Dunk and Egg நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகிறது இந்த சீரிஸ்.
Owen Harris மற்றும் Sarah Adina Smith இயக்கும் இந்த சீரிஸில் Peter Claffey, Dexter Sol Ansell, Finn Bennett, Bertie Carvel, Daniel Ings உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த சீரிஸ் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹெச் பி ஓ தளத்தில் வெளியாக உள்ளது.