What Happens at Night
What Happens at NightMartin Scorsese, Leonardo DiCaprio

`What Happens at Night'... பேய் படத்தில் Martin Scorsese + Leonardo DiCaprio கூட்டணி

இந்தப் படத்திற்காக 7வது முறையாக இணைகிறது மார்ட்டின் ஸ்கார்சஸி - லியானார்டோ டி காப்ரியோ கூட்டணி.
Published on

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சஸி. 2023ல் வெளியான `Killers of the Flower Moon' படத்திற்கு பின் ஸ்கார்சஸி, அடுத்து இயக்கவுள்ள படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. Peter Cameron எழுதிய What Happens at Night என்ற நாவலை தழுவி அடுத்த படத்தை இயக்குகிறார் மார்ட்டின் ஸ்கார்சஸி.

இந்தப் படத்திற்காக 7வது முறையாக இணைகிறது மார்ட்டின் ஸ்கார்சஸி - லியானார்டோ டி காப்ரியோ கூட்டணி. இதில் ஜெனிஃபர் லாரன்ஸும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு திரைக்கதையை பேட்ரிக் மார்பர் எழுதுகிறார். ஒரு குழந்தையைத் தத்தெடுக்க, ஐரோப்பிய நகரத்திற்கு பயணிக்கும் ஒரு அமெரிக்க தம்பதியினர் பற்றிய ஹாரர் (Gothic fiction) கதையே இது.

What Happens at Night
What Happens at NightJennifer Lawrence

இப்படத்தை What Happens at Night நாவலின் உரிமையைப் பெற்ற Studiocanal நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 2026ம் ஆண்டு துவக்கத்தில் இப்படத்தின் வேலைகள் ஆரம்பிக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது, லியானார்டோ நடிப்பில் பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கியுள்ள `One Battle After Another' படம் செப்டம்பர் 26ம் தேதி வெளியாகவுள்ளது. ஜெனிஃபர் லாரன்ஸ் நடிப்பில் லின் ராம்சே இயக்கியுள்ள `Die, My Love' படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் மார்ட்டின் ஸ்கார்சஸி தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com