F1
F1Brad Pitt

F1 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Brad Pitt | Joseph Kosinski

படம் வெளியாகி நான்கு மாதங்களாகியும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது F1. எனவே Rent அடிப்படையில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளிநாடுகளில் மட்டும் வெளியிட்டனர்.
Published on

ஜோசப் கோசின்ஸ்கி (Joseph Kosinski) இயக்கத்தில் ப்ராட் பிட் (Brad Pitt), ஜாவியேர் பார்டம் (Javier Bardem), டேம்சன் இட்ரிஸ் (Damson Idris), கேரி கான்டன் (Kerry Condon) நடித்து ஜூன் 27 வெளியான படம் `F1'. Formula One கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது வரை உலகம் முழுக்க 629 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஸ் சம்பந்தப்பட்ட படம் என்பதால், அதை நல்ல திரையரங்குகளில் பார்க்கவே பார்வையாளர்கள் ஆர்வம் காட்டினார். குறிப்பாக ஐமாக்ஸ் திரையரங்கில் இப்படத்தை பார்ப்பது மறக்கமுடியாத அனுபவம் எனப் பலரும் குறிப்பிட்டனர். எனவே ஓடிடியில் படம் வெளியாவதற்கு காத்திருக்காமல் பலரும் திரையரங்கில் இப்படத்தை பார்த்தனர். படம் வெளியாகி நான்கு மாதங்களாகியும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது F1. எனவே Rent அடிப்படையில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளிநாடுகளில் மட்டும் வெளியிட்டனர்.

இந்தியாவில் இப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில் அதற்கு விடை கிடைத்துள்ளது.

டிசம்பர் மாதம் 12ம் தேதி ஆப்பிள் டிவி+ ஓடிடி தளத்தில் F1 வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர். படம் வெளியாகி ஆறு மாதங்கள் கழித்து ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. திரையரங்கிலும் வெற்றி பெற்று பல மாதங்கள் திரையாகி, பெரிய இடைவேளைக்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com