Dakota Johnson
Dakota JohnsonA Tree Is Blue

இயக்குநராகும் பிரபல ஹாலிவுட் நடிகை! | A Tree Is Blue

இப்படம் Autism Spectrumல் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இளம் பெண்ணைச் சுற்றி நிகழும் கதையாக உருவாகிறது.
Published on

`The Social Network', `21 Jump Street', `Fifty Shades of Grey', `Madame Web', `Materialists' போன்ற பல ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் டகோட்டா ஜான்சன் (Dakota Johnson). இவர் இப்போது இயக்குநராக களம் இறங்கவுள்ளார். 'A Tree Is Blue' என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாம்.

Charli XCX, Jessica Alba, Vanessa Burghardt
Charli XCX, Jessica Alba, Vanessa BurghardtA Tree Is Blue

இப்படத்தில் ஜெஸ்ஸிகா ஆல்பா (Jessica Alba), வனேசா பர்கார்ட் (Vanessa Burghardt) மற்றும் பிரபல பாடகி சார்லி எக்ஸ்சிஎக்ஸ் (Charli XCX) ஆகியோரை இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் நடிப்பதுடன் படத்தின் கதையையும் எழுதுகிறார் வனேசா பர்கார்ட். இப்படம் Autism Spectrumல் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இளம் பெண்ணைச் சுற்றி நிகழும் கதையாக உருவாகிறது. தன்னுடைய உயர்நிலைப் பள்ளி படிப்புக்குப் பிறகு, தன்னை பொத்தி பொத்தி பாதுக்காக்கும் தன் அன்பான அம்மாவிடம் இருந்து விடுபட்டு, சுதந்திரம், நட்பு, கொஞ்சம் குழப்பம் எனப் பலவற்றை அவள் தேடி செல்வதே கதை.

இதற்கு முன்பு டகோட்டா ஜான்சன் இயக்கிய Loser Baby என்ற குறும்படம் 2024-ல் டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. டகோட்டா இயக்கும் முதல் திரைப்படமான A Tree Is Blue படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com