ஷூட் முடிந்தது... Post-Productionக்கு ஒன்றரை ஆண்டு? - Avengers: Doomsday Update|MCU|Robert Downey Jr
ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகும் 'Avengers: Doomsday' படம், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் 39வது படமாக உருவாகிறது. ராபர்ட் டவுனி ஜூனியர் டாக்டர் டூமாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஐந்தே மாதங்களில் முடிவடைந்தது. VFX மற்றும் CGI பணிகள் காரணமாக 14 மாதங்கள் போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற உள்ளது. படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி வெளியாகும்.
ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகும் படம் `Avengers: Doomsday'. Avengers: Endgame படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம் Avengers பட வரிசையில் ஐந்தாவது படமாகவும், Marvel Cinematic Universeல் 39வது படமாகவும் உருவாகிறது. மார்வெலின் ஆறாவது பேஸ் படம் இது.
டாக்டர் டூம் கதாப்பாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கியது. தற்போது ஐந்தே மாதங்களில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 14 மாதங்கள், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற உள்ளதாம்.
VFX மற்றும் CGI சார்ந்த காட்சிகள் படத்தில் நிறைய உள்ளன என்பதால் அதற்கான பணிகள் மிக அதிகம் உள்ளது. எனவே தான் ஷூட் முடிந்தும், ஒரு வருடங்களுக்கு மேல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற உள்ளது.
மார்வெல் படங்களில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக மாறியிருக்கிறது `Avengers: Doomsday' படம். மேலும் முந்தைய பாகங்களில் இடம்பெற்ற பல சூப்பர் ஹீரோக்களும், வில்லன்களும் இந்த பாகத்தில் வர இருக்கிறார்கள். படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ளது.

