Doomsdayக்கு முன் பார்க்க வேண்டிய 15 படங்கள்! | MCU | Avengers
மார்வெல் ரசிகர்களுக்காக வரும் Avengers: Doomsday, MCUவின் 39வது படமாக டிசம்பர் 18ல் வெளியாகிறது. ரூஸோ பிரதர்ஸ் இயக்கிய இந்த Multiverse crossover படத்தில் Avengers, X-Men, Fantastic Four உள்ளிட்ட பல உலகங்கள் இணைகின்றன. இதற்கான தயாரிப்பாக Disney+ வெளியிட்ட பட்டியலில் X-Men, Loki, Spider-Man: No Way Home, Deadpool & Wolverine உள்ளிட்ட 15 படைப்புகள் அவசியம் பார்க்க வேண்டியதாக கூறப்பட்டுள்ளது.
மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தாக வர இருக்கிறது Avengers: Doomsday. Avengers: Endgame படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படம் Marvel Cinematic Universeல் 39வது படம். ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப்படம் மிகப்பெரிய Multiverse crossover ஆக அமையவுள்ளது. எனவே இதில் Avengers மட்டுமின்றி X-Men, Fantastic Four உள்ளிட்ட பல்வேறு Marvel உலகங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் ஒன்று சேர உள்ளனர். இதனால், “Doomsday-க்கு முன் எந்த Marvel படைப்புகளை பார்க்க வேண்டும்?” என்ற பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது Disney+.
X-Men
X2
Captain America: The First Avenger
The Avengers
Avengers: Infinity War
Avengers: Endgame
Loki 1 & 2
Shang-Chi
Spider-Man: No Way Home
Black Panther: Wakanda Forever
Captain America: Brave New World
Deadpool & Wolverine
Doctor Strange in the Multiverse of Madness
Thunderbolts
The Fantastic Four: First Steps
பழைய X-Men மற்றும் X2 பட உலகம் Avengers: Doomsday மூலம் MCUவில் முக்கியமான முறையில் சந்திக்க உள்ளன. மார்வெல்லின் சமீபத்திய தொடரான Loki பார்ப்பதன் மூலம் Multiverse மற்றும் TVA (Time Variance Authority) பற்றி புரிந்து கொள்ள முடியும். MCU-வில் Multiverse conceptக்கு முக்கிய காரணியான Spider-Man: No Way Home படமும் முக்கியமானது. Deadpool & Wolverine மூலம் Fox-ன் Marvel கதாபாத்திரங்களும் MCU-வின் Multiverseல் இணைந்ததால் அந்தப் படமும் முன்பே பார்க்க வேண்டிய ஒன்று. இது போல இந்தப் பட்டியலில் உள்ள 15 படைப்புகளும் Avengers: Doomsdayவை பார்க்கும் முன் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே இது ‘Doomsday’க்கு முன் Marvel கொடுக்கும் மிகப்பெரிய homework. இதனை முடிக்க நீங்கள் ரெடியா?

