அதர்வாவுக்கு ஆக்ஷன் கற்றுக்கொடுத்த ஹாலிவுட் இயக்குனர்!
நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, இந்திப் பட இயக்குனர் அனுராக் காஷ்யப், கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள படம், ’இமைக்கா நொடிகள்’ . ’டிமான்டி காலனி’ அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
இந்தப் படத்துக்காக பிரமாண்ட ஆக்ஷன் காட்சி ஒன்று சமீபத்தில் பெங்களூரில் படமாக்கப்பட்டது. இதில், ஹாங்காங்கைச் சேர்ந்த லீஹோனியு என்ற புகழ் பெற்ற சைக்கிள் ஸ்டன்ட் நிபுணர், ஸ்டன் சிவாவுடன் இணைந்து பணியாற்றினார். லீஹோனியு பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். அதர்வாவுக்கு அவர் சைக்கிள் ஸ்டன்ட் பயிற்சி அளித்தார். அதர்வாவுடன் பல சண்டை கலைஞர்களும் பங்கு பெற்றனர்.
’இயக்குனர் இந்த காட்சியை விவரித்ததும் இதை எப்படி பிரமாண்டமாக, மற்றவர்கள் பிரமிக்கும் படி செய்ய முடியும் என்று யோசித்தேன். அதர்வா போன்ற வளர்ந்து வரும் ஆக்ஷன் ஹீரோவுக்கு இப்படி ஒரு பிரமாண்டம் அவசியம் என்பதை உணர்ந்து ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரை அழைத்து வந்தோம். இந்த சண்டைக் காட்சி மிரட்டலாக இருக்கும்’ என்கிறார் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார்.