ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட்
ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட்எக்ஸ் தளம்

மீண்டும் முற்றியது கருத்து வேறுபாடு; இறுதிக்கட்டத்தை எட்டிய ஏஞ்சலினா ஜோலி – பிராட் பிட் விவாகரத்து!

பிரபல ஹாலிவுட் நட்சத்திர ஜோடியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் விவாகரத்திற்கான தீர்வை எட்டியுள்ளனர்.
Published on

ஹாலிவுட்டின் முன்னணி பிரபலங்களான நடிகை ஏஞ்சலினா ஜோலியும், நடிகர் பிராட் பிட்டும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம், கடந்த 2014-இல் நடைபெற்றது. அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016-ஆம் ஆண்டு தம்பதிகள் விவாகரத்து கோரிய நிலையில், நீண்ட சமரச முயற்சிகளுக்கு பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்வதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அவர்கள் இருவருக்குள்ளும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி
பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலிஎக்ஸ் தளம்

தற்போது தம்பதிகள் இருவரும் மீண்டும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதுகுறித்து ஜோலியின் வழக்கறிஞர் ஜேம்ஸ் சைமன், ”கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது கணவரிடம் இருந்து ஏஞ்சலினா விவாகரத்து கோரினார். குழந்தைகளை பராமரிப்பதில் இருவருக்குள்ளும் பிரச்னை இருந்து வருகிறது.

நீதிமன்றத்தில் வழக்குகள் எதுவும் இன்னும் தாக்கல் செய்யவில்லை. நீதிபதியின் ஒப்புதல் பெறவேண்டியுள்ளது. இதுதொடர்பாக பிராட் பிட்டின் வழக்கறிஞருடன் பேசியுள்ளோம். குழந்தைகள் பராமரிப்பு மற்றும் சொத்துகள் பகிர்ந்து கொடுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட்
”யாரும் விரக்தியடைய வேண்டாம்” - தோல்வி குறித்து கமலா ஹாரிஸ்! அதிருப்தியில் ஹாலிவுட் பிரபலங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com