விஜய் ஆண்டனி ஜோடியாக வெளிநாட்டு நடிகை!

விஜய் ஆண்டனி ஜோடியாக வெளிநாட்டு நடிகை!
விஜய் ஆண்டனி ஜோடியாக வெளிநாட்டு நடிகை!

’மூடர் கூடம்’ நவீன் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆங்கில நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ’காளி’ படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே ’திமிரு பிடிச்சவன்’  என்ற படத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை ’மூடர் கூடம்’ நவீன் இயக்குகிறார். இதை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். 

(நவீன்)

இந்தப் படம் பற்றி இயக்குனர் நவீன் கூறும்போது, ’மூடர் கூடம்’ படத்துக்குப் பிறகு, அடுத்த படத்தை இயக்கி முடித்து விட்டேன். விரைவில் அதன் டைட்டிலை வெளியிட இருக்கிறோம். ’கயல்’ ஆனந்தி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்கும் படம், ஆக்‌ஷன் திரில்லர் வகையை சேர்ந்தது. ஸ்டைலிஷான படமாக இது இருக்கும். விஜய் ஆண்டனியின் லுக்கையும் கெட்டப்பையும் மாற்ற இருக்கிறோம். இதற்காக மும்பையில் இருந்து டெக்னீஷியன்கள் வர வழைக்கப்பட இருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடக்க இருக்கிறது. படத்துக்கு தயாரிப்பாளராக, டி.சிவா கிடைத்தது அதிர்ஷ்டம்’ என்றார்.

இந்தப் படத்தில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. இதனால் கதைக்குப் பொருத்தமாக வெளிநாட்டு ஹீரோயின் ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக படக்குழுத் தெரிவித்தது. 

 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com