ரோல்மாடல்... அஜித்தை புகழும் ஹாலிவுட் நடிகை!

ரோல்மாடல்... அஜித்தை புகழும் ஹாலிவுட் நடிகை!

ரோல்மாடல்... அஜித்தை புகழும் ஹாலிவுட் நடிகை!
Published on

விவேகம் படத்தில் தீவிரவாதியாக நடித்திருக்கிறார் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஸிமெஹிக்.

அவர் அஜித்துடன் நடித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகை அமிலா, “விவேகம் படம் தமிழ் சினிமாவின் பெருமையை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்லும். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சிவாவுக்கு நன்றி. ஹாலிவுட்டில் பியர்ஸ் ப்ரோஸ்னன் இயக்கிய ‘தி நவம்பர் மான்’ படத்தில் நான் நடித்திருந்தேன். அதில் எனது சண்டைக்காட்சியையும் நடிப்பையும் பார்த்துதான் விவேகம் படத்தில் நடிக்க அழைத்தனர். இயக்குநர் சிவா திருப்தி அடையும் அளவிற்கு எனது உழைப்பைக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.

மேலும், “அஜித்தை பார்ப்பதற்கு முன்புவரை அவர் இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார். அப்படிப்பட்ட ஸ்டார் நடிகர் எங்கே நம்மை கண்டுகொள்ளப்போகிறார் என நினைத்திருந்தேன். ஆனால், அதிர்ச்சியாக இருந்தது. நான் எதிர்பார்த்ததற்கு மாறாக எளிமையாக, அடக்கமான மனிதராக அதேவேளை தேர்ந்த நடிகராக இருந்தார். அவருடன் பணியாற்றியது அழகான அனுபவம். அபாயமான காட்சிகளிலும் தன்னைப்பற்றி சிந்திக்காமல் முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். அவரது கண்கள் ஆறு வயது சிறுவனின் கண்களை போல அத்தனை எனர்ஜியாக இருக்கும். அவரை உலக சினிமாவே நடிக்க அணுகும். ஒரே வார்த்தையில் அவரைப்பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் அனைவருக்குமான ஒரு ரோல்மாடல்” என்கிறார் அமிலா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com