அஜீத்தின் எளிமை: வியக்கும் ஹாலிவுட் நடிகர்

அஜீத்தின் எளிமை: வியக்கும் ஹாலிவுட் நடிகர்
அஜீத்தின் எளிமை: வியக்கும் ஹாலிவுட் நடிகர்

அஜீத்தின் எளிமை என்னை கவர்ந்தது என்று ஹாலிவுட் நடிகர் செர்ஜ் க்ரோஜோன் கஜின் தெரிவித்துள்ளார்.

அஜீத், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘விவேகம்’. சிவா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 24-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், கேசினோ ராயல், 300, ரெய்ஸ் ஆஃப் அன் எம்பயர், த டிரான்ஸ்போர்ட்டர் ரிபண்டட் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ஸ்டன்ட் கலைஞர் செர்ஜ் க்ரோஜோன் கஜின் (Serge Crozon Cazin) அஜீத்துடன் நடித்துள்ளார். 

இதில் நடித்துள்ளது பற்றி கூறும்போது,’ கதைப்படி படத்தில் அஜீத்தின் 5 பேர் கொண்ட டீமில் நானும் இருக்கிறேன். இந்தப் படம் மூலம் இந்திய சினிமாவில் கால் பாதிப்பதை பெருமையாக கருதுகிறேன். இந்த கேரக்டரில் நடிக்க இன் டர்வியூ வைத்துதான் இயக்குனர் என்னை தேர்வு செய்தார். சிவாவின் காட்சிப்படுத்தல் முறையையும், அவரின் தெளிவும் என்னை ஈர்த்தது. அஜித்துடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். 'விவேகம்' படத்தில் எனது காட்சிகளை முடித்த பின்தான் அவர் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றும் அவர் எவ்வளவு பெரிய பிரபலம் என்பதையும் தெரிந்துக்கொண்டேன். படப்பிடிப்பில் அவ்வளவு எளிமையாக இருந்தார். அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. சண்டை காட்சி சாகசங்களையும் அவரே செய்துள்ளார். கடின உழைப்பாளி. படப்பிடிப்பு இடைவேளையில் அவருடன் நடந்த உரையாடல்கள் இனிமையானது’ என்றார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com