சினிமா
அவர் இதயம் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் துடித்தது: விவேக்கிற்கு ஜகிவாசுதேவ் இரங்கல்
அவர் இதயம் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் துடித்தது: விவேக்கிற்கு ஜகிவாசுதேவ் இரங்கல்
அவர் இதயம் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் துடித்தது என்று நடிகர் விவேக்கின் மறைவிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விவேக் தனது கலையில் ஜாம்பவானாகத் திகழ்ந்து, கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்தவர். தமிழ்நாட்டின் மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தை துவக்கியதற்கும் என்றும் நம் நினைவில் நிற்பார். அவர் இதயம் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் துடித்தது” என்று தெரிவித்துள்ளார்.