’ஹிப் ஹாப்’ ஆதியின் ’அன்பறிவு’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

’ஹிப் ஹாப்’ ஆதியின் ’அன்பறிவு’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
’ஹிப் ஹாப்’ ஆதியின் ’அன்பறிவு’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

’ஹிப் ஹாப்’ ஆதி நடிக்கும் ‘அன்பறிவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. அதனைத்தொடர்ந்து ’நட்பே துணை’, ’நான் சிரித்தால்’ உள்ளிட்டப் படங்கள் இவரது நடிப்பில் வெளியாகியுள்ளன. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆதியின் ‘அன்பறிவு’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா நடிக்கிறார். நெப்போலியன், ஊர்வசி, விதார்த் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

ஆதி இசையமைப்பாளராக அறிமுகமான ‘ஆம்பள’ படத்தினை சுந்தர் சிதான் இயக்கி இருந்தார். அந்த நட்பே, ஆதியின் ’மீசைய முறுக்கு,’ நட்பே துணை’, ’நான் சிரித்தால்’ படங்களை தயாரிக்க வைத்தது. முதன்முறையாக ஆதி ’அன்பறிவு’ படத்தின் மூலம் வேறு தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று வெளியாகி இருக்கிறது. தேர் வடம்பிடிக்கும் திருவிழா பின்னணியில் கிராமத்துக் கெட்டப்பில் கலர்ஃபுல்லாக இருக்கும் ஆதியின் புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. அவரது கைகளில் மாடுகளுக்கு பயன்படுத்தப்படும் வடம் இருக்கிறது. அதனால், படத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com