சினிமா
தீயணைப்புதுறையின் அர்ப்பணிப்பு - ‘தீ வீரன்’ ஆவணப்படத்தை வெளியிட்ட ஹிப்ஹாப் தமிழா!
தீயணைப்புதுறையின் அர்ப்பணிப்பு - ‘தீ வீரன்’ ஆவணப்படத்தை வெளியிட்ட ஹிப்ஹாப் தமிழா!
தமிழக தீயணைப்பு வீரர்களைப் பற்றியும் அவர்கள் மேற்கொண்ட சிக்கிலான தீயணைப்பு சம்பவங்கள் குறித்த ஆவணப்படத்தை இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா வெளியிட்டுள்ளார்.
தீ வீரன் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட ஆவணப்படத்தில், “தீயணைப்பு துறை வீரர்கள் தங்களது அன்றாட சந்திக்கும் பிரச்னைகள், பிற உயிரை காப்பாற்ற அவர்கள் எடுக்கும் சிக்கலான சிரத்தைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மேலும் தீயணைப்புத்துறையின் இணை இயக்குநர்களான மீனாட்சி விஜயகுமார் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் தாங்களும், தங்களுடன் பணியாற்றிய தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட சம்பவங்கள் குறித்து விவரிக்கின்றனர். இந்த ஆவணப்படத்தை இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து இயக்கியுள்ளார். அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த ஆவணப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.