நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்று இசை ஆல்பம் வெளியிடும் ஹிப் ஹாப் ஆதி!
பாடகர், இசைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைகளைக் கொண்ட ஹிப் ஹாப் ஆதி கொரோனா ஊரடங்கு சூழலில் ‘நான் ஒரு ஏலியன்’ என்ற ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். 6 பாடல்களைக்கொண்ட இந்த ஆல்பம் வரும் ஆகஸ்டு-15 சுதந்திர தினத்தன்று வெளியாக இருக்கும் சூழலில் இந்த ஆல்பத்தின் முதல் பாடல் இன்று 7 மணிக்கு வெளியாகிறது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஹிப் ஆப் ஆதி, விஷாலின் ‘ஆம்பள’ படம் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். சுந்தர்.சியின் ‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் ஹீரோவானவர் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக பிஸியாகிவிட்டார். இசை ஆல்பங்களுக்கு புகழ்பெற்றவர் ஹீரோவானதால் சில வருடங்களாக ஆல்பங்கள் வெளியிடவில்லை. தற்போது, இரண்டு வருட இடைவெளியில் மீண்டும் பழைய ஹிப் ஆப் ஆதியாக இசை ஆல்பம் வெளியிடுவது அவர்களது ரசிகர்களிடையே வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.