ஹாக்கி வீரனாக ஹிப் ஆப் தமிழா

ஹாக்கி வீரனாக ஹிப் ஆப் தமிழா

ஹாக்கி வீரனாக ஹிப் ஆப் தமிழா
Published on

ஹிப் ஆப் தமிழா ஆதி ஹாக்கி விளையாட்டு வீரனாக அடுத்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்.

சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஆப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான திரைப்படம் மீசைய முறுக்கு. இந்தப் படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி பெரிய வெற்றி அடைந்தது. இப்போது மீண்டும் அவ்னி மூவிஸ், ஆதியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளது. இதனை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தில் ஹிப் ஹாப் ஆதி ஹாக்கி விளையாட்டு வீரனாக நடிக்க இருக்கிறார். ஹாக்கியை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்சமயம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com